டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி..........குமரியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்......குமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவு இன்று வெளியீடு ......
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும......நித்தியானந்தா விவகாரம் நெல்லையில் போட்டி போராட்டம்........காஷ்மீரில் ஓராண்டில் 363 குழந்தைகள் பலி ......

டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி

      குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவரம் அடைந்துள்ளது. மயிலாடி அருகே 6 மாத குழந்தை இக்காய்ச்சலுக்கு பலயிhகி உள்ளது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. நெல்லையில் மட்டும் 20க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் டெங்கு பாதிப்பை தடுக்க தமிழகம் முழுவதும் தீவர நடவடிக்கை மேற்கொள்ள சுகாதரத் துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முன் தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் விஜய் நேற்று முன்தினம் இந்த மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை அமைச்சர் பச்சைமால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது நடமாடும் மருத்துவகுழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. குமரி மாவட்ட கல்வி குழு மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சலை ஒழிப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி ஊராட்சிகள் உதவி இயக்குனர் நசீர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இதில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது எப்படி தேங்கிய தண்ணீரில் கொசு புழுக்கள் உருவாவதை ஒழிப்பது எப்படி? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் முழு சுகாதார திட்டத்தை அமல்படுத்தும் வகையில் குப்பை கழிவுளை அகற்றுவது சுத்தமான குடிநீர் வழங்குவது சுகாதாரத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

.

காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும

     காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : காவிரி நதி நீர் ஆணையம் கடைசியாக 2003 பிப்ரவரி 10-ம் தேதி கூடியது. அதன்பிறகு இதன் கூட்டம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தேன். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை சரியாக அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தேன். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்புக்கு பிறகே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவது குறித்து பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரிநீரை கர்நாடக மாநிலம் கூடுதலாக பயன்படுத்துவதை தடுக்கவும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெ. கடிதம் எழுதியுள்ளார். மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தால் தமிழகத்தில் குறுவை சம்பா சாகுடி பணிகள் பாதிக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

ENTERTAINMENT

UNGAL
SUPER
CAMPUS

© Copyright 2010. Kanyakumari Today.com. All rights reserved.
Powered & Maintained by SriM Consultancy Services